தேசியக்கொடியுடன் 7,575 கி.மீ. தூரத்திற்கு பயணித்த இந்தோ-திபெத்திய ராணுவ வீரர்கள்
இம்மாதம் தொடக்கத்தில் லடாக்கின் கரகோரம் கணவாயில் தொடங்கிய வீரர்களின் பேரணி அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் முடிவடைந்தது.
சிம்லா,
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி லடாக்கில் இந்தோ-திபெத்திய எல்லை வீரர்கள், அம்ரித் மஹோத்சவ பேரணியில் ஈடுபட்டனர். இம்மாதம் தொடக்கத்தில் லடாக்கின் கரகோரம் கணவாயில் தொடங்கிய வீரர்களின் பேரணி அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் முடிவடைந்தது.
கையில் தேசியக்கொடியுடன் சுமார் 7 ஆயிரத்து 575 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட மலைகள், மேடுகள், நீர்நிலைகள் போன்ற ஆபத்தான பாதைகளை கடந்து சென்று தங்கள் பேரணியை வெற்றிகரமாக முடித்த ராணுவ வீரர்கள், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story