கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: சென்னையை சேர்ந்த 3 பேர் பலி
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் இருந்து கேதார்நாத்க்கு புறப்பட்டுச்சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா,சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
மீதி 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story