மராட்டியம்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் காயம்


மராட்டியம்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் காயம்
x

மராட்டிய மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பேர் காயமடைந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பலர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story