யோகி ஆதித்யநாத் பாதுகாப்பில் குளறுபடி - 8 போலீசார் இடைநீக்கம்
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 8 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
லக்னோ,
பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 10-ந் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா நிகழ்ச்சியில் பங்கேற்க கோரக்பூருக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூர் விமான நிலையத்துக்கு சென்றார்.
அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. விமான நிலையம் அருகே மற்றொரு சாலையில் இருந்து வந்த வாகனங்களை தடுக்க வேண்டிய போலீசார், அவற்றை விமான நிலையம் நோக்கி செல்ல அனுமதித்ததால், அவை யோகி ஆதித்யநாத்தின் வாகனங்களுக்கு முன்பு குறுக்கிட்டன.
அத்துடன், இன்ஸ்பெக்டர் யதுநந்தன் யாதவ், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்ராய் ஆகியோர் ஒயர்லெஸ் கருவியை பயன்படுத்தாததும் தெரிய வந்தது.
எனவே, பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக, மேற்கண்ட 2 பேர் உள்பட மொத்தம் 8 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story