மராட்டியம்: முதியோர் இல்லத்தில் ரூ.1.01 கோடி கொள்ளை போன வழக்கில் 9 பேர் கைது


மராட்டியம்: முதியோர் இல்லத்தில் ரூ.1.01 கோடி கொள்ளை போன வழக்கில் 9 பேர் கைது
x

மராட்டியத்தில் முதியோர் இல்லத்தில் ரூ.1.01 கோடி கொள்ளை போன வழக்கில் 9 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் உல்ஹாஸ் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் கடந்த ஜூலை மாதம் 1.01 கோடி ரூபாய் மதிபுள்ள தங்கம் மற்றும் பணம் திருடுபோனது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட 9 பேர் இன்று செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணையில், முதியோர் இல்லத்தின் பெண் லேப் டெக்னீசியன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர், அப்பெண், முதியோர் இல்லத்தில் உள்ள பணம் குறித்து பிறருக்கு தகவல் கொடுத்ததாக விட்டல்வாடி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அசோக் பகத் தெரிவித்தார்.

திருடப்பட்ட தங்கத்தை வாங்கிய இரண்டு நகைக்கடைக்காரர்களை போலீசார் கைதுசெய்து,ரூ. 58.31 லட்சம் மதிப்புள்ள 1,170 கிராம் தங்கம் மற்றும் ரூ.64.71 லட்சம் மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டனர்.


Next Story