இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேருக்கு புதிதாக கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேருக்கு புதிதாக கொரோனா
x

கோப்புப்படம் 

கொரோனா தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 58 குறைந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது. நேற்று முன்தினம் 108 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 480 பேருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நாட்டில் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 146 பேர் மீண்டனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 660 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 58 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,925 ஆகும்.

2 நாட்களாக கொரோனாவால் இறப்பு இல்லை என்ற நிலை நிலவி வந்தது. நேற்று கேரளாவில் மட்டும் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 2-ஐ கணக்கில் கொண்டு வந்தனர். இதனால் தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.


Next Story