மீன்பிடி வலையில் சிக்கிய 6 அடி நீள முதலை
பெலகாவி அருகே மீன்பிடி வலையில் 6 அடி நீள முதலை சிக்கியது.
பெலகாவி:
பெலகாவி மாவட்டம் நிப்பானி தாலுகாவில் கரடகா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் தூத்கங்கா ஆற்றில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியை சேர்ந்த பண்டுகவடா என்ற வாலிபர் மீன்பிடிக்க வலைவிரித்து இருந்தார். பின்னர் வலையை இழுத்தார். அதில் மீன்களுடன் முதலை சிக்கியிருந்தது தெரியவந்தது.
உடனே அப்பகுதியை சேர்ந்த மேலும் சிலர் சென்று மீன்பிடி வலையில் சிக்கிய முதலையை கயிற்றால் கட்டிப்போட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அந்த முதலையை மீட்டு சென்றனர். பிடிபட்ட முதலை 6 அடி நீளம் கொண்டதாகும்.
Related Tags :
Next Story