6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பக்கத்து வீட்டுக்காரர் கைது


6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பக்கத்து வீட்டுக்காரர் கைது
x

பண்ட்வாலில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு;

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலில், 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மாலை சிறுமி, வீட்டு முன்பு விளையாடியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நபர், சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வைத்து அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, தனது பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறியுள்ளார். ஆனால் பெற்றோர், போலீசில் புகார் அளிக்கவில்லை.

கைது

இதனை பயன்படுத்திக்கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், சிறுமியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், பண்ட்வால் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்தனர்.மேலும் அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story