கூண்டில் சிக்கிய கருஞ்சிறுத்தை
கூண்டில் கருஞ்சிறுத்தை சிக்கியது.
கார்வார்:
உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகா வந்தூர் ஜட்டிகத்தே என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறுத்ைத ஒன்று ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி கொன்று தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க அதே பகுதியை சேதர்ந்த சீதாராம ஹெக்டே மற்றும் ஜி.எஸ்.பட்டா ஆகியோரின் விளை நிலத்தையொட்டி வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த கூண்டில் கருஞ்சிறுத்தை ஒன்று சிக்கியிருந்தது. நேற்று முன்தினம் இரவு இரைதேடி வந்த சிறுத்தை இரும்பு கூண்டில் சிக்கியது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு கூடி வந்தனர். கருஞ்சிறுத்தையை செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். பின்னர் வனத்துறையினர் கருஞ்சிறுத்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story