உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; அனைவரும் மீட்பு


உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; அனைவரும் மீட்பு
x
தினத்தந்தி 7 Aug 2022 8:34 PM IST (Updated: 7 Aug 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் 39 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று முசோரி அருகே இன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.




முசோரி,



உத்தரகாண்டில் முசோரி-டேராடூன் சாலையில் 39 பயணிகளை சுமந்து கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று மதியம் இந்தோ-திபெத் எல்லை போலீசாரின் முகாம் அருகே சென்றபோது, திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து, இந்தோ-திபெத் எல்லை போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை அவர்கள் மீட்டனர்.

இதன்பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story