டெல்டாவில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு


டெல்டாவில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு
x

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது.

சென்னை,

வங்கக்கடல், மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த ஜன. 29-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் டெல்டா உள்ளிட்டமாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது.

இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழைநீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டது. பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதம் குறித்து மத்திய குழு இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்கிறது. யூனுஸ், பிரபாகரன், போயா ஆகிய தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு, இன்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பயிர்ச்சேதம் குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், அவர்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story