விநாயகர் சதுர்த்தி விழாவில் குடிபோதையில் ஆட்டம் போட்ட நபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை


விநாயகர் சதுர்த்தி விழாவில் குடிபோதையில் ஆட்டம் போட்ட நபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை
x

விநாயகர் சதுர்த்தி விழாவில் குடிபோதையில் ஆட்டம் போட்ட நபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டார்.

திருப்பதி,

திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலம் கர்லபுடியில் கடந்த 7-ந்தேதி கிராம மக்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சந்திரய்யா என்பவரும், வாலிபர்களும் சேர்ந்து ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் சந்திரய்யா குடிபோதையில் இருந்தார்.

அப்போது சூர்யகுமார் என்பவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலும், ஒரு தண்ணீர் பாட்டிலும் தனது கைகளில் வைத்திருந்தார். தன்னிடம் இருந்த தண்ணீரை சந்திரய்யா மீது சூர்யகுமார் தெளித்துள்ளார். இதனால், 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சூர்யகுமார் தன்னிடம் இருந்த பெட்ரோலை சந்திரய்யா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதில் அவர் உடல் கருகினார்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் சந்திரய்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சந்திரய்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூர்யகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story