தக்காளி விற்ற லாபத்தில் கார் வாங்கிய விவசாயி.. மணப்பெண்ணை தேடி வருகிறார்


தக்காளி விற்ற லாபத்தில் கார் வாங்கிய விவசாயி.. மணப்பெண்ணை தேடி வருகிறார்
x

கோப்புப்படம் 

கர்நாடகாவில் தக்காளி விற்ற லாபத்தில் விவசாயி ஒருவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

பெங்களூரு,

நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தக்காளியை அதிக அளவில் பயிரிட்டுள்ள சில விவசாயிகள், அதனை விற்று பெரும் லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதனிடையே, கர்நாடகாவில் ஒரு விவசாயி தனது 12 ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு தற்போது ரூ.40 லட்சம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியதாவது;

''எனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளேன். கிட்டத்தட்ட 800 தக்காளி மூட்டைகளை விற்று ரூ.40 லட்சம் சம்பாதித்தேன். சில மாதங்களுக்கு தக்காளியின் விலை இதேநிலையில் இருந்தால், எனக்கு ரூ.1 கோடி லாபம் கூட கிடைக்கும். நான் என் நிலத்தை நம்பினேன், அது ஏமாற்றவில்லை. தக்காளி விற்ற பிறகு கிடைத்த லாபத்தில் ஒரு எஸ்யூவி கார் வாங்கினேன்.

தற்போது தக்காளி விற்பனையின் மூலம் நல்ல பணம் சம்பாதிப்பதால் இப்போது மணப்பெண்ணை தேடி வருகிறேன். இவ்வாறுராஜேஷ் கூறினார்.


Next Story