பொதுநல மனுக்களை சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்தது உறுதியானால் ரூ.50 ஆயிரம் அபராதம்- கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


பொதுநல மனுக்களை சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்தது உறுதியானால் ரூ.50 ஆயிரம் அபராதம்- கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

பொதுநல மனுக்களை சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்தது உறுதியானால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு: பொதுநல மனுக்களை சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்தது உறுதியானால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுநல மனுக்கள் தாக்கல்

கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேடமாரனஹள்ளியில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து மசூதி மற்றும் மயானம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த பொதுநல மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் ஆராதே முன்னிலையில் நடைபெற இருந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், பொதுநல மனுவை திரும்ப பெறுவதாகவும், இதற்காக மெமோவும் கொடுத்தார்கள். இதன் காரணமாக தலைமை நீதிபதி அலோக் ஆராதே கோபம் அடைந்தார். அப்போது பொதுநல மனு சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

மேலும் அவர் கூறுகையில், பொதுநல மனுக்களை தாக்கல் செய்துவிட்டு, அதனை திரும்ப பெறுவதாக வக்கீல்கள் கூறுவது ஏற்புடையது இல்லை. இனிமேல் பொதுநல மனுக்களை சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் சொந்த காரணங்களுக்காக பொதுநல மனுக்களை தாக்கல் செய்துவிட்டு, விசாரணை நடைபெறும் போதே திரும்ப பெறுவதற்கும் அனுமதி வழங்கப்படாது.

அவ்வாறு திரும்ப பெற்றாலும் கோர்ட்டு தாமாக முன்வந்து அந்த பொதுநல மனு மீது விசாரணை நடத்தும். சொந்த காரணங்களுக்காக பொதுநல மனுக்களை தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடிக்க கூடாது, என்றார். மேலும் ஏரி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக கூறி பொதுநல மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை நீதிபதி அலோக் ஆராதே உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story