நூதன முறையில் கவர்ந்து, பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல்


நூதன முறையில் கவர்ந்து, பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல்
x

உத்தர பிரதேசத்தில் பெண்ணுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்து, தொடர்ந்து பேசி, தனியாக அழைத்து சென்று 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த அவலம் நடந்து உள்ளது.

லக்னோ,


உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் பதோசராய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தனது கணவருடன் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை சந்தித்து, அவருக்கு மொபைல் போன் ஒன்றை வாங்கி கொடுத்து உள்ளார்.

அதனை அவர் வாங்கியதும், இளம்பெண்ணிடம் தொடர்ந்து பல விசயங்களை அந்த இளைஞர் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பெண்ணின் வீட்டுக்கு வந்த அந்த இளைஞர், உங்களுடைய கணவர் அழைக்கிறார் என கூறியுள்ளார்.

அந்த நபர் தனக்கு நன்றாக தெரிந்தவர் என்பதனால் தயங்காமல், இளைஞரின் பின்னாலேயே அவர் சென்றுள்ளார். அந்த இளைஞர் கிராமத்துக்கு வெளியே தனியான இடத்துக்கு அவரை கூட்டி சென்றுள்ளார். அந்த பகுதியில் முன்பே 4 பேர் இருந்துள்ளனர்.

இதன்பின்னர், அவர்கள் அனைவரும் இளம்பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்துள்ளனர். அதன்பின்பு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் மயங்கியதும், அச்சமடைந்து அப்படியே விட்டு விட்டு 5 பேரும் தப்பியோடி விட்டனர்.

இதன்பின்னர், ஒரு வழியாக அந்த பெண்ணும் வீடு வந்து சேர்ந்து உள்ளார். எனினும், குற்றவாளிகளின் மிரட்டல் மற்றும் சமூகத்திற்கு பயந்து இதனை அவர் வெளியே கூறவில்லை.

இருப்பினும், தைரியம் வரவழைத்து கொண்டு தனது கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி எடுத்துரைத்து உள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த 23-ந்தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தில் மொராதாபாத் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் 15 வயது சிறுமி, 5 பேர் கும்பலால் பலாத்காரத்திற்கு ஆளானார். அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி, மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் பின்னர் தப்பி சென்று விட்டது. சிறுமி நிர்வாண கோலத்தில் சாலையில் நடந்து சென்ற காட்சிகள் கொண்ட வீடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story