சிமெண்டு செங்கல் விழுந்து சிறுமி பரிதாப சாவு


சிமெண்டு செங்கல் விழுந்து சிறுமி பரிதாப சாவு
x

பெங்களூருவில் சிமெண்டு செங்கல் விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

பெங்களூரு:

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைலசந்திராவில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அங்கு கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலை பார்த்து வருகின்றனர். அந்த தம்பதியின் மகள் திவ்யா (வயது 15). இந்த சிறுமி குடியிருப்பு அருகேயே தனது பெற்றோருடன் சிறிய குடிசையில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் நின்று சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து ஒரு சிமெண்டு செங்கல் கீழே விழுந்தது.

அந்த செங்கல் சிறுமி திவ்யாவின் தலையில் விழுந்தது. இதனால் தலையில் பலத்தகாயம் அடைந்த திவ்யா ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story