இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பிரதிநிதியை நியமிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பிரதிநிதியை நியமிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
x

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பிரதிநிதியை அனுப்புவது குறித்து எந்த முடிவையும் பொலிட் பீரோ எடுக்கவில்லை என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அரசியல் முடிவுகளை எடுக்கும் குழுவான 'பொலிட் பீரோ' உறுப்பினர்களின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

"கட்சியின் எந்தவொரு பிரதிநிதியையும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அனுப்புவது குறித்து எந்த முடிவையும் பொலிட் பீரோ எடுக்கவில்லை. இந்திய குடியரசின் மதசார்பற்ற ஜனநாயக தன்மையை பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்து மேலும் விரிவுபடுத்தும் பணியில் பொலிட் பீரோ ஈடுபடும்.

மத்திய அரசு மற்றும் மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்துவதில் இருந்து பா.ஜ.க. விலக்கி வைக்கப்பட வேண்டும். அதற்காக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களை பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story