வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!


வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!
x

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த 17-ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று மேற்கு வங்கம், ஒடிசா கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா - தெற்கு ஜார்கண்ட் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story