பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: உரையை நிறுத்தி காத்திருந்த பிரதமர் மோடி


பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: உரையை நிறுத்தி காத்திருந்த பிரதமர் மோடி
x

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க தனது மருத்துவக் குழுவினரை பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார். அவரை வரவேற்கும் விதமாகவும், சந்திரயான்-3 விண்கல வெற்றி கொண்டாட்டத்துக்காகவும் பாலம் விமான நிலையத்தில் சிறப்பு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டு இருந்தபோது, அங்கு இருந்த ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வெயில் காரணமாக அவர் மயங்கியதாக தெரிகிறது. இதை கவனித்த பிரதமர் மோடி, உடனடியாக தனது உரையை நிறுத்தினார்.

அத்துடன் தனது மருத்துவக்குழுவினரை அழைத்து அந்த நபரை பரிசோதிக்குமாறு அறிவுறுத்தினார். அவரை கூட்டத்தில் இருந்து தனியாக கொண்டு செல்லுமாறும், அவரது காலணியை கழற்றுமாறும் கேட்டுக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்துக்குப்பின் தனது உரையை அவர் தொடர்ந்தார். பிரதமர் மோடியின் இந்த பரிவு, கூட்டத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story