நடு ரோட்டில் வைத்து ஆட்டோ ஓட்டுனரை சரமாரி தாக்கிய காவலர் - அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை
நடு ரோட்டில் வைத்து ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் கோபமடைந்த காவலர் ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வேகமாக வைரலாகியது வீடியோ பரவியநிலையில் உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவலரை பணியிடை நீக்கம் செய்து மாண்டியா காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story