ரிக்ஷாவில் சென்ற கர்ப்பிணிக்கு பிரசவம் - ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் குழந்தை இறந்த பரிதாபம்
ரிக்ஷாவில் சென்ற கர்ப்பிணிக்கு பிரசவம் ஆனது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரூபா. கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. ரூபாவின் உறவினர்கள் அவரை ரிக்ஷா வண்டியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது லக்னோ கவர்னர் மாளிகை அருகே சாலையில் சென்றபோதே அவருக்கு குறைபிரசவம் நடந்தது.
இதைபார்த்த சிலர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அரைமணி நேரத்துக்கு பின்னர் வந்த ஆம்புலன்சில் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிசுவை பரிசோதித்த டாக்டர்கள் அது ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மாநிலத்தின் சுகாதாரத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும்பின. இந்தநிலையில் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story