கல்லூரிக்கு தனியாக நடந்து சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை


கல்லூரிக்கு தனியாக நடந்து சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 March 2024 5:24 AM IST (Updated: 26 March 2024 6:00 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து தர்ம-அடி கொடுத்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அங்கு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் கல்லூரிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த வாலிபர் அங்கிருந்து ஓடினார். ஆனாலும் அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம-அடி கொடுத்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ஜெயநகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாரிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் சுரேஷ் (வயது 26) என்று தெரிந்தது. அவர் மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story