காபு தாலுகாவில் உறவினர் வீட்டில் திருடிய வாலிபர் பிடிபட்டார்


காபு தாலுகாவில் உறவினர் வீட்டில் திருடிய வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காபு தாலுகாவில் உறவினர் வீட்டில் திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மங்களூரு-

காபு தாலுகாவில் உறவினர் வீட்டில் திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் திருட்டு

உடுப்பி மாவட்டம் காபு தாலுகா பெராேஜ கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 17-ந் தேதி சொந்த வேலை காரணமாக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். இதனை அறிந்த மர்மநபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரொக்கத்தை திருடி சென்றனர்.

பின்னர் அனிதா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீராவில் இருந்த 120 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இ்ருக்கும் என கூறப்படுகிறது. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அனிதா, காபு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உறவினர் கைவரிசை

இந்தநிலையில், அனிதாவின் உறவினரான ஜோன் பிரஜ்வல்(வயது 32) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதனால் போலீசார் ஜோன் பிரஜ்வலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அனிதா வீட்டில் தங்கநகைள், ரொக்கத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜோன் பிரஜ்வலை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜோன் பிரஜ்வல் திருடிய நகைகளை வங்கியில் அடகு வைத்தும், அதில் கிடைத்த பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

ஜோன் பிரஜ்வல் கொடுத்த தகவலின்படி அவரிடம் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜோன்பிரஜ்வலை காபு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story