உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் படுகொலை


உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் படுகொலை
x

பெங்களூருவில் உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யபபட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் பிரஜ்வல் (வயது 21). இவர் இளம்பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக பின்தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் தனது சகோதரரிடம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நியூ பையப்பனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பிரஜ்வலை சந்தித்து பேசிய இளம்பெண்ணின் சகோதரர், தனது சகோதரியை கேலி, கிண்டல் செய்தது பற்றி கேட்டு உள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பிரஜ்வல்லை, இளம்பெண்ணின் சகோதரர் உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரஜ்வல் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இளம்பெண்ணின் சகோதரரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story