வாடிக்கையாளர் போல நடித்து நகைக்கடையில் திருடிய வாலிபர் கைது


வாடிக்கையாளர் போல நடித்து நகைக்கடையில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:47 PM GMT)

சிவமொக்காவில் வாடிக்கையாளர் போல நடித்து நகைக்கடையில் திருடிய வாலிபர் ஓராண்டுக்கு பிறகு சிக்கினார்.

சிவமொக்கா-

சிவமொக்கா டவுன் காந்தி பஜாரில் தங்க நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வாடிக்கையாளர் போல வந்த வாலிபர் ஒருவர், நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் சென்றுவிட்டார். அந்த நபர் சென்ற பிறகு நகைகளை ஊழியர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது, கவரிங் நகை ஒன்று அதில் இருந்தது. மேலும் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான தங்க நகை மாயமாகி இருந்தது.

இதுகுறித்து ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வாடிக்கையாளர் போல வந்த நபர், போலி நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் தொட்டபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கொப்பாலா பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரியான மெகபூப் (வயது 25) என்பவர் தான் நகைக்கடையில் திருடியது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மெகபூப்பை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,


Next Story