விளைநிலத்தில் செத்து கிடந்த காட்டு யானை


விளைநிலத்தில் செத்து கிடந்த காட்டு யானை
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:45 PM GMT)

சரகூரு அருகே விளைநிலத்தில் காட்டு யானை ஒன்று ெசத்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சரகூரு

காட்டு யானை செத்து கிடந்தது

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா ெகாத்தகாலா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ெவளியேறி கிராமத்திற்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் ெசய்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த நாகப்பா என்பவருக்கு ெசாந்தமான விளைநிலம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

அவர் நேற்று வழக்கம் தனது விளைநிலத்துக்கு சென்றார். அப்போது அவரது விளைநிலத்தில் காட்டு யானை ஒன்று செத்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகப்பா, இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

வனத்துறையினர் விசாரணை

பின்னர் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு கால்நடை டாக்டர்களை வரவழைத்தனர். கால்நடை டாக்டர்கள் ெசத்துபோன காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னா் அதேப்பகுதியில் காட்டு யானையை வனத்துறையினர் குழித்தோண்டி புதைத்தனர். யானை செத்ததற்கான காரணம் தெரியவில்லை.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி யானை செத்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். மேலும் விவசாயி நாகப்பாவை பிடித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், செத்துபோன யானை 20 வயது நிரம்பிய ஆண் யானை ஆகும். யானை ெசத்ததற்கான காரணம் தெரியவில்லை.

மின்சாரம் தாக்கி செத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் யானை சாவுக்கான காரணம் தெரியவரும் என்றார்.


Next Story