டெல்லி திகார் சிறையில் சிசோடியா மற்ற கைதிகளுடன் அடைப்பு


டெல்லி திகார் சிறையில் சிசோடியா மற்ற கைதிகளுடன் அடைப்பு
x

டெல்லி திகார் சிறையில் சிசோடியா மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவர் சிறைக்கு பகவத் கீதை, மூக்குக்கண்ணாடி, மருந்துகள் ஆகியவற்றை எடுத்துசெல்ல அனுமதி வழங்கிய கோர்ட்டு, அவருக்கு விபாசனா அறை (தியானம் செய்வதற்கு ஏற்ற அறை) வழங்க பரிசீலிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆனாலும், மணிஷ் சிசோடியா மற்ற கிரிமினல் கைதிகளுடன் 1-ம் எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், விபாசனா அறை வழங்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், "பாதுகாப்பு காரணங்களையொட்டி மணிஷ் சிசோடியா தனி வார்டில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் குறைந்த எண்ணிக்கையிலான, நல்ல நடத்தையுள்ள கைதிகள்தான் அடைக்கப்பட்டுள்ளனர். தாதாக்கள் யாரும் அடைக்கப்படவில்லை" என தெரிவித்தனர்.

1 More update

Next Story