வக்பு வாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது - லட்ச கணக்கில் பணம், துப்பாக்கி பறிமுதல்


வக்பு வாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது - லட்ச கணக்கில் பணம், துப்பாக்கி பறிமுதல்
x

வக்பு வாரிய முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இஸ்லாமிய மத மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன.

இதனிடையே, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான். இவர் 2016-ல் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டார். தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது, பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியின் வீட்டில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 24 லட்ச ரூபாய், உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து வக்பு வாரிய முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கானை டெல்லி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

1 More update

Next Story