டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி இன்று மெகா பேரணி


டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி இன்று மெகா பேரணி
x

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று 'மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

தலைநகரில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பேரணியில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களான சௌரவ் பரத்வாஜ், அதிஷி, சஞ்சய் சிங் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகிப்பார்கள்.

டெல்லி அரசின் சேவைகள் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் மாபெரும் பேரணியை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைத்துள்ளது.

இந்த மெகா பேரணியில் ' சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களின் ஆதரவை அவசர சட்டத்திற்கு எதிராக பெரும் நோக்கில் ஆம் ஆத்மி மாபெரும் பேரணியை நடத்துகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக ஆம் ஆத்மி சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் வீடு, வீடாக பிரசாரம் மேற்கொண்டு இப்பேரணியில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story