டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணையுமா..? - கூட்டணி குறித்து இன்று ஆலோசனை


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணையுமா..? - கூட்டணி குறித்து இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 13 Feb 2024 8:48 AM IST (Updated: 13 Feb 2024 11:47 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ளது. இருப்பினும் காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் சுமூக உடன்பாடு எட்டமுடியவில்லை.

இந்தநிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்-மந்திரியுமான பகவந்த் மான் கூறினார். இதே நிலை டெல்லியிலும் இருந்தது. ஆனால் காங்கிரஸ் தரப்போ, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிவித்தது.

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியான கோபால்ராய் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றார்.


Next Story