மைசூரு அரண்மனையில் அபிமன்யு யானைக்கு மரத்தால் ஆன அம்பாரி சுமக்கும் பயிற்சி
மைசூரு அரண்மனையில் அபிமன்யு யானைக்கு மரத்தால் ஆன அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மழை ெபய்ததால் பயிற்சி தாமதமாக தொடங்கியது.
மைசூரு
மைசூரு தசரா விழா
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த தசரா விழாவில் 14 யானைகள் வந்துள்ளன. இந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அந்த யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக யானைகளுக்கு மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், 10-ந்தேதி (நேற்று) தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவுக்கு மரத்தால் ஆன மாதிரி அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்க முடிவு ெசய்யப்பட்டது.
அம்பாரி சுமக்கும் பயிற்சி
இதற்கான ஏற்பாடுகள் மைசூரு அரண்மனையில் செய்யப்பட்டு வந்தது. மாலை 5 மணிக்கு மரத்தால் ஆன அம்பாரியை சுமக்கும் பயிற்சி தொடங்க இருந்தது.
ஆனால் அந்த சமயத்தில் பலத்த மழை கொட்டியதால் அபிமன்யு யானைக்கு மரத்தால் ஆன அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.இதையடுத்து மாலை 6 மணிக்கு பிறகு மழை குறைந்ததால் அபிமன்யுவுக்கு மரத்தால் ஆன அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
10-க்கும் மேற்பட்டோர் அந்த மர அம்பாரியை அபிமன்யு மீது கட்டினர். கொட்டும் மழையிலும் அந்த அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யு யானை கம்பீர நடைபோட்டு வந்தது. இதனை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் அபிமன்யு யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு கம்பீர நடை போட்டு செல்லும். அதற்கான மணல் மூட்டை மற்றும் மரத்தால் ஆன அம்பாரியை சுமக்கும் பயிற்சி அபிமன்யுவுக்கு அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.