அப்தாப்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டங்கள் வேண்டும்: அசாம் முதல்-மந்திரி பேச்சு


அப்தாப்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டங்கள் வேண்டும்:  அசாம் முதல்-மந்திரி பேச்சு
x

நமது நாட்டிற்கு அப்தாப் (ஷ்ரத்தா கொலை குற்றவாளி) போன்றவர்கள் தேவையில்லை என்றும் கடவுள் ராமர், பிரதமர் மோடி போன்றவர்கள் வேண்டுமென அசாம் முதல்-மந்திரி பேரணியில் பேசியுள்ளார்.



புதுடெல்லி,


டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 250 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7-ந்தேதி நடைபெறும்.

இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமுடன் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்த பல யுக்திகளை பா.ஜ.க. கடைப்பிடித்து வருகிறது.

இதன்படி, பல்வேறு முக்கிய தலைவர்களை பிரசார பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா டெல்லியில் நடந்த பொது பேரணி ஒன்றில் இன்று கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, நமது நாட்டிற்கு அப்தாப் (ஷ்ரத்தா கொலை குற்றவாளி) போன்றவர்கள் தேவையில்லை. கடவுள் ராமர் போன்ற நபர் மற்றும் பிரதமர் மோடி போன்ற தலைவர் வேண்டும்.

நமக்கு பொது சிவில் சட்டம் தேவையாக உள்ளது. லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டங்கள் வேண்டும். அப்தாப்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டங்கள் வேண்டும் என்று டெல்லி பேரணியில் அவர் பேசியுள்ளார்.



Next Story