துபாய் செல்வதற்கு அனுமதி கோரி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல்


துபாய் செல்வதற்கு அனுமதி கோரி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல்
x

நடிகையின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கடந்த நவம்பர் 15-ந் தேதி அவருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், துபாயில் வரும் 29-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால், வரும் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை துபாய் செல்வதற்கு அனுமதி வழங்க ஜாக்குலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைலேந்த மாலிக், 27-ந்தேதி வரை அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி, வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story