பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.723 கோடி கூடுதல் ஒதுக்கீடு


பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.723 கோடி கூடுதல் ஒதுக்கீடு
x

இந்திய வீரர், வீராங்கனைகளை மிகச்சிறந்த முறையில் தயார்படுத்தும் பொருட்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் விளையாட்டுத்துறைக்கு ரூ.3,397.32 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட்டை விட ரூ.723.97 கோடி அதிகமாகும். இந்த ஆண்டு சீனாவில் ஆசிய விளையாட்டும், 2024-ம் ஆண்டு பாரீசில் ஒலிம்பிக் போட்டியும் நடக்க உள்ளது.

இவ்விரு போட்டிகளுக்கு இந்திய வீரர், வீராங்கனைகளை மிகச்சிறந்த முறையில் தயார்படுத்தும் பொருட்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மை திட்டமான கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்துக்கு அரசின் முன்னுரிமை தொடருகிறது. கடந்த ஆண்டு இந்த திட்டத்துக்கு ரூ.606 கோடி வழங்கப்பட்டது. தற்போது அதைவிட கூடுதலாக ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story