மின்துறை சீர்திருத்தங்களுக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.7,054 கோடி கூடுதல் கடன் - மத்திய அரசு அனுமதி
மின்துறை சீர்திருத்தங்களுக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.7,054 கோடி கூடுதல் கடன் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
மின்சாரத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், கூடுதல் கடன்களைப் பெறுவதற்கு அனுமதியளிப்பது போன்ற நிதி ஊக்குவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை வழங்கி வருகிறது.
இது 2021-2022 முதல் 2024-2025 வரை 4 ஆண்டு காலத்துக்கு கிடைக்கும்.
இந்த நிலையில் மத்திய மின்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2021-2022, 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கான சீர்திருத்தங்களுக்காக 12 மாநில அரசுகளுக்கு கடன் அனுமதியை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.
இந்த கூடுதல் கடன் அனுமதியின் மூலம் ரூ.66,413 கோடி நிதி ஆதாரத்தை மாநிலங்கள் பெருக்கிக் கொள்ள முடியும். இதில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.7,054 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story