ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய பரிந்துரை


ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய பரிந்துரை
x
தினத்தந்தி 30 Aug 2023 10:21 AM GMT (Updated: 30 Aug 2023 10:56 AM GMT)

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி நிறைவு பெற்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கின.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரை அனுப்பவும் நாடாளுமன்ற உரிமைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் தான் பேசவில்லை என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story