நிலா, பூமியை செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 விண்கலம்!


நிலா, பூமியை செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 விண்கலம்!
x

Image Courtesy : @isro twitter

‘ஆதித்யா எல்-1’ விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பெங்களூரு,

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) கடந்த 2-ந்தேதி 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் 'ஆதித்யா எல்-1' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் தொடர்ந்து வருகிறது. விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 'ஆதித்யா எல்-1' விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் விண்கலத்தின் VELC மற்றும் SUIT கருவிகளின் புகைப்படம், நிலா மற்றும் பூமியின் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'சூரியனை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வரும் 'ஆதித்யா எல்-1' விண்கலம், நிலா மற்றும் பூமியை செல்பி புகைப்படம் எடுத்துள்ளது' என்று பதிவிடப்பட்டுள்ளது.




Next Story