வேதாந்தா இடைக்கால மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு


வேதாந்தா இடைக்கால மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு
x

ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொருட்களை அப்புறப்படுத்தவும் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைக்கபட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், அங்கு தேங்கியுள்ள அபாயகரமான பொருட்களை அப்புறப்படுத்தவும் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் தவே தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், இவை தொடர்பாக பதில் அளிக்க இதுவரை உத்தரவிடவில்லை, கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை பெற வேண்டியுள்ளது என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் மற்றொரு வக்கீல் ஷியாம் திவான் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பான வேதாந்தாவின் இடைக்கால மனு மீதான விசாரணையை ஏப்ரல் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை முடிவடைந்த பிறகு, ஸ்டெர்லைட் மூடலுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.


Next Story