கடும் எதிர்ப்பு எதிரொலி: கா்நாடகத்தில் மதுபானம் வாங்க வயது குறைப்பு முடிவு வாபஸ்


கடும் எதிர்ப்பு எதிரொலி: கா்நாடகத்தில் மதுபானம் வாங்க வயது குறைப்பு முடிவு வாபஸ்
x

கோப்புப்படம்

கடும் எதிர்ப்பு எதிரொலியாக கா்நாடகத்தில் மதுபானம் வாங்க வயது குறைப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.

பெங்களூரு,

கா்நாடகத்தில் 21 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே மதுபானம் வாங்கவும், அதை பயன்படுத்தவும் அனுமதி உள்ளது. இந்த மதுபானம் வாங்குவதற்கான வயது வரம்பை கர்நாடக அரசு சமீபத்தில் 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பால், கர்நாடக அரசு தனது முடிவை பரிசீலனை செய்து வந்தது. இந்த நிலையில் மதுபானம் வாங்க வயது குறைப்பு முடிவை கர்நாடக அரசு வாபஸ் பெற்றுள்ளது. 21 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே மதுபானம் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.


Next Story