ராஜஸ்தான்: மாநிலங்களவை தேர்தலையொட்டி காங். பாணியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஓட்டலுக்கு மாற்றம்!


ராஜஸ்தான்: மாநிலங்களவை தேர்தலையொட்டி காங். பாணியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஓட்டலுக்கு மாற்றம்!
x

மாநிலங்களவை தேர்தலையொட்டி ராஜஸ்தானில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவை தேர்தலை பொறுத்தவரை எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ராஜ்யசபா சீட்களின் எண்ணிக்கை மாறுபடும்.

ராஜஸ்தானில் உள்ள நான்கு மாநிலங்களவை சீட்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரசுக்கு 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மற்றவர்கள் ஆதரவுடன் மொத்தம் 126 பேர் சவுகரியமான நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் இப்போது எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கூடவில்லை. காங்கிரஸ் சார்பில் களம்காணும், மூன்றாவது வேட்பாளரான பிரமோத் திவாரி வெற்றி பெறுவதற்கு கூடுதலாக 15 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது.

இதனையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக அவர்களுக்கு சாதகமாக மனம் மாற்றிவிடுமோ என பயந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் உதய்பூருக்கு மாற்றியது.

இந்நிலையில், காங்கிரஸ் பாணியை பின்பற்றி பாஜகவும் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ஓட்டலில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகிறது.

78 வாக்குகளை பெற்ற பாஜகவில் ஒருவர் வெற்றி பெறுவது உறுதியாகும். மற்றொரு இடத்தை கைப்பற்றுவதற்கு 30 வாக்குகள் தேவை.இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் நேற்று கட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இரண்டு பேருந்துகளில் ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பாஜ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக எம்எல்ஏக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது'' என்றார்.


Next Story