இந்தியா திரும்பிய மம்தா பானர்ஜிக்கு மருத்துவ பரிசோதனை


இந்தியா திரும்பிய மம்தா பானர்ஜிக்கு மருத்துவ பரிசோதனை
x

இந்தியா திரும்பிய மம்தா பானர்ஜிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 12 நாள் அரசுமுறை பயணமாக துபாய், ஸ்பெயின் நாடுகளுக்குச் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அந்த பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா மேற்கு வங்காளம் திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் கொல்கத்தாவில் உள்ள சேத் சுக்லால் கர்னானி அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்.

இது வழக்கமான பரிசோதனைதான் என்றும், டாக்டர்கள் அவரை கவனித்தனர் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மம்தாவுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு, சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதுமுதல் மம்தாவுக்கு காலில் அசவுகரியம் இருப்பதாகவும், அதுதொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்துகொண்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story