மனைவி கள்ளக்காதலுடன் ஓடிபோனதால் மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்...!


மனைவி கள்ளக்காதலுடன் ஓடிபோனதால் மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்...!
x

மராட்டியத்தில் காதலனுடன் தனது மனைவி ஓடிப்போனதால் ஆத்திரமடைந்த மருமகன், தனது மாமனாரை சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜால்னா மாவட்டம் பைத்தான் அருகே உள்ள அடூலில் வசிக்கும் நபரின் மனைவி, அவரின் கள்ளக்காதலுனுடன் அவுரங்காபாத்திற்கு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அம்பம் சாரதா நகரில் உள்ள தனது மாமனாரின் வீட்டுக்குச் சென்று சண்டைபோட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிப்போய் அவர் தனது மாமனாரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனாரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story