கடிதம் எழுதிவைத்துவிட்டு சாமியார், காதலியுடன் ஓட்டம்


கடிதம் எழுதிவைத்துவிட்டு  சாமியார், காதலியுடன் ஓட்டம்
x

கடிதம் எழுதிவைத்துவிட்டு சாமியார், காதலியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ராமநகர்: ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூரில் குத்தகே மடம் உள்ளது. இந்த மடத்தின் சாமியாராக இருந்து வருபவர் சிவமகந்தே சுவாமி என்ற ஹரீஷ் சுவாமி. இந்த நிலையில், மடத்தில் இருந்த சாமியார் திடீரென்று மாயமாகி விட்டார். அவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுடன் தான் சாமியார் மடத்தில் இருந்து ஓடி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சாமியார் எழுதி வைத்திருந்த கடிதம் மடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் சாமியாராக வாழ்க்கையை என்னால் தொடர முடியவில்லை. நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன். அதனால் மடத்தின் வாழ்க்கையில் இருந்து விடுபட்டுள்ளேன். என்னை யாரும் தேட வேண்டாம். எங்கோ சென்று நிம்மதியாக வாழ உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

சாமியார் இதற்கு முன்பும் மடத்தில் இருந்து ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சாமியாரும் ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாகவும், அவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக மடத்தில் இருந்து ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மாகடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story