'அக்னிபத்' திட்டம், இளைஞர்கள் மீதான மோசடி - மேகாலயா கவர்னர் சாடல்


அக்னிபத் திட்டம், இளைஞர்கள் மீதான மோசடி - மேகாலயா கவர்னர் சாடல்
x

Image Courtacy: PTI

‘அக்னிபத்’ திட்டம், இளைஞர்கள் மீதான மோசடி என்று மேகாலயா கவர்னர் தெரிவித்துள்ளார்.

பாக்பத்,

முப்படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக்கும் அக்னிபத் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமும் இன்றி வீடு திரும்பும் அவர்களுக்கு திருமண வரன்கள் எதுவும் அமையாது. அந்தவகையில் அக்னிபத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது' என சாடினார்.

எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆள்தேர்வு செய்யும் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் சத்யபால் மாலிக் போர்க்கொடி உயர்த்தி அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story