அக்னிபத் திட்டம் நாட்டு நலனுக்கு எதிரானது: காங்கிரஸ்
அக்னிபத் திட்டம் நாட்டு நலனுக்கு எதிரானது என்று காங்கிரஸ் மீண்டும் சாடியுள்ளது.
ஜம்மு,
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இளைஞர்களும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும், கடும் எதிர்ப்புகளையும் மீறி ஆள்சேர்ப்பதற்கான அறிவிப்புகளை ராணுவம் வெளியிட்டது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கும் நாட்டு நலனுக்கும் எதிரானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஓய்வு பெற்ற கேப்டனுமான அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், நமது ராணுவத்தின் பலத்தை அக்னிபத் திட்டம் வரும் காலங்களில் பலவீனப்படுத்தும்" என்றார்.
Related Tags :
Next Story