அக்னிபத் போராட்டம்: உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது !


அக்னிபத் போராட்டம்: உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது !
x
கோப்புப்படம் 

அக்னிபாத் போராட்டம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்னா,

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பல இடங்களில் ரெயில்களை மறித்தனர்.

உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியீல் எதிர்ப்பு நிலவுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக போராட்டம், கல்வீச்சு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story