அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பம்


அக்னிபத் திட்டம்:  விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பம்
x

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிராக போராட்டம் நடந்தபோதிலும், திட்டத்தை வாபஸ்பெற மாட்டோம் என்று கூறியது. ராணுவம், விமானப்படை, கடற்படை என தனித்தனியாக ஆட்கள் தேர்வு நடக்கிறது.

இந்தநிலையில், அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி, அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.


Next Story