மின்கம்பத்தில் மனைவியை கட்டி வைத்து கடுமையாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி சம்பவம்


மின்கம்பத்தில் மனைவியை கட்டி வைத்து கடுமையாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி சம்பவம்
x

மின்கம்பத்தில் மனைவியை கட்டி வைத்து கடுமையாக தாக்கிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் அர்சேனா கிராமத்தை சேர்ந்தவர் குஷ்மா. இவரது கணவர் ஷயம்பிஹாரி.

இதனிடையே, கணவன் - மனைவி இடையே ஒரு சில விவகாரங்களில் அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் - மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷயம்பிஹாரி அவரது மனைவியை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்துள்ளார்.

அங்கு கிராமத்தின் தெருவில் உள்ள மின் கம்பத்தில் மனைவி குஷ்மாவை கயிற்றால் கட்டிய ஷயம்பிஹாரி அவரை கட்டையால் கடுமையாக தாக்கினார். பின்னர் குஷ்மாவை தரதரவென இழுத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குஷ்மா தன்னை தாக்கிய கணவர் ஷயம்பிஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாமியார் மீது போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக உள்ள ஷயம்பிஹாரி மற்றும் குஷ்மாவின் மாமியாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story