அதிமுக விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
அதிமுக விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான சசிகலா 2017-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
தள்ளுபடிக்கு எதிராக சசிகலா வழக்கு தொடர்ந்த நிலையில் செம்மலையும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சசிகலா மேல்முறையீட்டை எதிர்த்து செம்மலை தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story