லண்டன் சென்ற விமானத்தில் ஊழியர்களை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு பயணத்தடை - ஏர் இந்தியா நடவடிக்கை


லண்டன் சென்ற விமானத்தில் ஊழியர்களை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு பயணத்தடை - ஏர் இந்தியா நடவடிக்கை
x

கோப்புப்படம்

லண்டன் சென்ற விமானத்தில் ஊழியர்களை தாக்கிய வாலிபர் 2 ஆண்டுகளுக்கு ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து லண்டனுக்கு கடந்த ஏப்ரல் 10-ந்தேதி இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஜஸ்கிரத் சிங் பட்டா (வயது 25) என்ற வாலிபரும் பயணம் செய்தார். இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஜஸ்கிரத் சிங் திடீரென எழுந்து விமானத்தின் கதவை திறக்க முயன்றார். உடனே விமான பணிப்பெண்கள் இருவர் அவரை தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த ஊழியர்களை ஆபாசமாக திட்டியதுடன், இருவரையும் தாக்கினார். பின்னர் பிற பயணிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் அவரை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதேநேரம் இந்த வன்முறை தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகமும் விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புக்குழுவினர், வாலிபர் ஜஸ்கிரத் சிங் பட்டா 2 ஆண்டுகளுக்கு ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story